கொரோனாவை விடவும் ஆபத்தான மாறியிருக்கும் வீதி விபத்துக்கள்..! 8 நாட்களில் 39 பேர் உயிரிழப்பு, 527 விபத்துக்கள், பொலிஸார் அதிர்ச்சி தகவல்..
இலங்கையில் கடந்த 8 நாட்களில் 527 விபத்துக்குள் நடந்துள்ளதாக கூறியிருக்கும் பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண, 39 பேர் இந்த விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் குறித்த விபத்துகளில் 122 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக அவர் கூறினார். கடந்த 08 நாட்களில் இடம்பெற்ற விபத்துகளில் 238 பேர் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளதா பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
வருடாந்தம் டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி 05 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அதிகளவான விபத்துகள் இடம்பெறும் என அவர் கூறினார். வீதி விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக
நாடளாவிய ரீதியில் நடமாடும் பொலிஸ் சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹண இதன்போது தெரிவித்துள்ளார்.