இந்தியாவிலும் பரவிய உருமாறிய ஆபத்தான கொரோனா!! -இங்கிலாந்தில் இருந்து வந்த 6 பேருக்கு தொற்று உறுதி-
இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த 6 பேருக்கு உருமாறிய புதிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரை இங்கிலாந்தில் இந்தியா வந்த பயணிகளை கண்டறிந்து தனிமைப்படுத்தி கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளபட்டு வருகிறது.
இதுவரை 33,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அதில் 114 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இவர்களது சளி மாதிரி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததில் 6 பேருக்கு உருமாறிய புதிய கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இவர்கள் 6 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இவர்களோடு தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தி சோதனை செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.