காணாமல்போயிருந்த தாயும் 3 வயதான மகளும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..!
கிணற்றிலிருந்து தாய் மற்றும் மகளின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் வவுனியா பறண்நட்டகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலங்களை மீட்டுள்ளனர்.
மேலும் குறித்த தாயும், மகளும் நேற்றய தினம் அவர்களது வீடுகளில் இருந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் காணாமல்போயிருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து உறவினர்கள் தேடி சென்ற மசயம் வீட்டின் அருகில் உள்ள கிணற்றிலிருந்து இருவரும் இன்று பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த ரமேஸ் ஜெயலலிதா (42-வயது) என்ற தாயும் திதுர்சனா (3-வயது ) என்ற அவரது மகளுமே உயிரிழந்துள்ளனர்.