நடிகர் ஆர்யாவுக்கு காயம்!! -டூப் போடாமல் சண்டை காட்சி செய்த போது விபரீதம்-
தற்போது ஆனந்த் சங்கர் இயக்கும் எனிமி படத்தின் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியில் டூப் போடாமல் நடித்த நடிகர் ஆர்யா காயமடைந்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் ஆர்யா நடிக்கும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது டூப் போடாமல் நடித்த ஆர்யா, எதிர்பாராத விதமாக கீழே விழுந்து காயம் அடைந்தார்.
இதையடுத்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஆர்யா, சிகிச்சை முடித்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.
வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய அவர் உடனடியாகவே படப்பிடிப்பு தளத்துக்கு வந்து எஞ்சியுள்ள சண்டைக் காட்சிகளை நடித்துக் கொடுத்துள்ளார்.