கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் உடல்களை புதைக்க இடங்கள் தேர்வு..! மன்னார், அம்பாறை மாவட்டங்களில்..
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கான வடகிழக்கு மாகாணங்களில் இரு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறியிருக்கும் அமைச்சர் வாசுதேவ நாணக்கார,
நிலத்தடி நீர் தொடர்பாக நீர்வழங்கல் அமைச்சு ஆய்வுகளை நடாத்தி அறிக்கை சமர்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் வடகிழக்கில் நிலத்தடி நீர் மிக ஆழத்தில் இருக்கும் இரு இடங்கள் ஆய்வின் மூலம் தேர்வதானவும் கூறினார்.
மேலும் வடக்கில் மன்னார் - மறிச்சுக்கட்டி பகுதியும், கிழக்கில் அம்பாறை- இறக்காமம் பகுதியும் நீர்வழங்கல் அமைச்சின் புவியலாளர்களால் ஆய்வுக்குட்படுத்தி இந்த ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதுடன்,
குறித்த பகுதிகளில் 30 அடி ஆழத்திலும் கூட தண்ணீரை கண்டுபிடிக்க முடியாது என அமைச்சர் கூறியுள்ளதுடன், கொரோனா தொற்றினால் உயிரிழந்த இஸ்லாமியர்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்ய பொருத்தமான இடத்தை
தேர்வு செய்வது தொடர்பான கோரிக்கை அடிப்படையில் இநத ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டதாகவும் தயாரிக்கப்பட்ட ஆய்வு அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.