SuperTopAds

வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய ரஜினி!! -ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி-

ஆசிரியர் - Editor II
வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய ரஜினி!! -ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி-

இரத்த அழுத்த மாறுபாடு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சூப்பஸ்டார் ரஜினிகாந்த், தற்போது சிகிச்சையை முடித்துக் கொண்டு வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார். 

ஐதராபாத்தில் நடந்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்று இருந்த போது படப்பிடிப்பு குழுவில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினிகாந்த் தனிமைப்படுத்திக்கொண்டார்.

இந்தநிலையில் திடீரென ரஜினிகாந்த் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ வைத்தியசாலையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடலை பரிசோதித்த வைத்தியர்கள், சில திங்கள் வைத்தியசாலையில் ஓய்வு எடுக்க அறிவுரை வழங்கினர்.

இதனை ஏற்று அவர் கடந்த 3 நாட்களாக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அவர் சிகிச்சையை மடித்துக் கொண்டு வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

வைத்தியசாலையில் காரில் வெளியேறிய அவர் ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தபடி சென்றார். இன்று மாலை அவர் விமானம் மூலம் சென்னை திரும்புவார் என கூறப்படுகின்றது.