உலகை உலுக்கி 2லட்சத்து 30 ஆயிரம் உயிர்களை பலியெடுத்த சுனாமி பேரலையின் 16ம் ஆண்டு துயர் நாள் இன்று உணர்வுபூர்வமாக..

ஆசிரியர் - Editor I

இலங்கை உள்ளிட்ட உலகின் பல நாடுகளை உலுக்கி 2 லட்சத்து 30 ஆயிரம் உயிர்களை பலியெடுத்த சுனாமி பேரலையின் 16ம் ஆண்டு துயர் நாள் இலங்கை முழுவதும் மிக உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது. 

2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி காலை, இந்தோனோசியாவின் சுமாத்ரா பகுதியில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட 9.3 நிலநடுக்கத்தின் விளைவாக, ஏற்பட்ட ஆழிப்பேரலை, தெற்கு, தென்கிழக்காசிய நாடுகள் 

மற்றும் ஆபிரிக்க நாடுகளின் கரையோரப் பகுதிகளில் கோரத் தாண்டவம் ஆடியது.ஒரு சில நிமிடங்களுக்குள், 2 இலட்சத்து 30 ஆயிரம் பேரை, இந்த ஆழிப்பேரலை விழுங்கிக் கொண்டது.மேலும், மில்லியன் கணக்கான மக்களை வீடற்றவர்களாக்கி, 

நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியது.இந்த ஆழிப்பேரலையால், ஆயிரக்கணக்கான சிறார்கள் அநாதரவாக்கப்பட்டனர்.இலங்கையில், ஆழிப்பேரலை 35 ஆயிரத்து 322 பேரை காவுவாங்கியதுடன், 

21 ஆயிரத்து 411 பேர் காயங்களுக்கு உள்ளாகினர். 5 லட்சத்து 15 ஆயிரத்து 115 பேர், இடம்பெயர்ந்தனர்.3 ஆயிரத்து 954 சிறுவர்கள் தமது பெற்றோரை இழந்தனர். இவர்களில் 979 சிறுவர்கள், தமது பெற்றோர் இருவரையும் பறிகொடுத்தனர்.

98 ஆயிரம் வீடுகள் சேதமடைந்ததுடன், ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் தமது வாழ்வாதாரங்களையும் இழந்தனர்.இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள ஆறு மாவட்டங்களும், 

ஆழிப்பேரலையால் மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்தன.பேரிடர்களை ஏற்படுத்திய ஆழிப்பேரலை நிகழ்ந்து, இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இதனை நினைவுகூரும் நிகழ்வுகள் கண்ணீர்மல்க நடைபெற்றது. 



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு