கொரோனா பாதிப்புக்கு மூச்சு பயிற்சி செய்யும் ரகுல் பிரீத் சிங்!!
கொரோனா வைரஸ் உறுதியானதுமே எனது அறையில் தனிமைப்படுத்திக்கொண்டேன். வெளியில் எங்கேயும் செல்வது இல்லை. தினமும் மூச்சுப்பயிற்சி செய்கிறேன் என்று நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.
ரகுல் பிரீத் சிங்குக்கு இரு தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து தன்னை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதுமே சில முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து அதனை வீடியோ மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட பிறகு என்னென்ன முன் எச்சரிக்கை எடுத்து இருக்கிறீர்கள் என்று பலரும் என்னிடம் கேள்வி எழுப்புகிறார்கள். கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதுமே எனது அறையில் தனிமைப்படுத்திக்கொண்டேன்.
வெளியில் எங்கேயும் செல்வது இல்லை. தினமும் மூச்சுப்பயிற்சி செய்கிறேன். வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறேன். சத்தான உணவுகளும் சாப்பிடுகிறேன். கொரோனாவில் இருந்து விரைவில் மீண்டு வருவேன் என்று கூறியுள்ளார்.