மருத்துவ கல்லூரி மாணவிகள் 3 பேருக்கு கொரோனா!! -200 மாணவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக-
மதுரை மருத்துவ கல்லூரி மாணவிகள் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை பரிசோதனைகள் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே அவர்களுடன் சேர்ந்த 200ற்க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று ஒரு மருத்துவ கல்லூரி மாணவி, பாராமெடிக்கல் படிப்பு மாணவிகள் 2 பேர் என மொத்தம் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் 3 பேரும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.