இன்று இரவு தொடக்கம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமா..? இராணுவ தளபதி விளக்கம்.

ஆசிரியர் - Editor I

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படாது. என கூறியிருக்கும் கொவிட் -19 எதிர்ப்பு செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான சவேந்திர சில்வா, 

ஊரடங்கு அமுல்படுத்துவதை அரசாங்கம் விரும்பவில்லை எனவும் அவர் கூறியிருக்கின்றார். பண்டிகை காலத்தை ஒட்டி ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா? என்ற சந்தேகத்திற்கு இராணுவ தளபதி இந்த விளக்கத்தை வழங்கியுள்ளார்.

மேலும் இன்று காலை 06.00 மணி முதல் திருகோணமலையில் உள்ள அபயாபுர கிராம சேவா பிரிவு மற்றும் ஜின்னா டவுன் ஆகியவற்றை தனிமைப்படுத்த மட்டுமே முடிவு எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.

கொழும்பு மாவட்டத்தில் வெல்லம்பிட்டியில் உள்ள ஹல்முல்லா பகுதியில் உள்ள லக்சந்தா சேவனா வீட்டு வளாகத்திற்கு விதிக்கப்பட்ட தனிமை இன்று முதல் நீக்கப்பட்டதாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு