கொரோனா அச்சத்தால் குடும்பத்தை விட்டு பிரிந்த கே.ஜி.எப் கதாநாயகன்!!
தனது குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தொற்றிவிடக்கூடாது என்ற காரணத்திற்காக கே.ஜி.எப் கதாநாயகனான யச் ஹோட்டலில் தங்கினார்.
தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் கே.ஜி.எப் இரண்டாம் பாகம் படத்தில் அவர் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.
படப்பிடிப்பை அதிரடி சண்டை காட்சிகளுடன் படமாக்கினார்கள். சண்டை கலைஞர்களுடன் அவர் சகதியில் புரண்டும், அடித்தும் நடிக்க வேண்டி இருந்தது. கூட்டமாக நடிகர், நடிகைகள் பங்கேற்கும் காட்சிகளும் அதிகம் இருந்தன. இதனால் குடும்பத்தினர் பாதுகாப்பை கருதி அவர் ஹோட்டலிலேயே தங்கினார்.
கொரோனா பரிசோதனை முடிந்து தொற்று இல்லை என்பது உறுதியான பின்பே குடும்பத்தினரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.