SuperTopAds

பாலசுப்பிரமணியத்துக்கு 339 கிலோவில் சாக்லெட் சிலை!!

ஆசிரியர் - Editor II
பாலசுப்பிரமணியத்துக்கு 339 கிலோவில் சாக்லெட் சிலை!!

புதுவை மிசன் வீதியில் உள்ள சாக்லெட் கடையில் ஆண்டுதோறும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு சாக்லெட் சிலைகள் செய்வது வழக்கம்.

இந்நிலையில் இவ்வருடம் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் சிலையை உருவாக்கியுள்ளனர். இதற்காக 339 கிலோ சாக்லெட்டை கொண்டு 161 மணிநேரம் செலவழித்து சுமார் 6 அடி உயரம் உள்ள இந்த சிலையை உருவாக்கி உள்ளனர். 

இந்த சிலையை கடைக்கு வருபவர்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். சிலர் அதன் அருகே நின்று செல்பியும் எடுத்துக்கொள்கின்றனர்.