நியூமகஸீன் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் பலருக்கு கொரோனா தொற்று..! கோரிக்கைகளை நிராகரிக்கும் அரசு, ஜ.நாவுக்கு கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டு்..

ஆசிரியர் - Editor I

கொழும்பு - நியூமகசின் உள்ளிட்ட சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 13 தமிழ் அரசியல் கைதிகள் உட்பட 64 தமிழ் கைதிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, நேற்று மட்டும் மகசின் சிறையில் உள்ள 16 தமிழ் கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்களுள் 13 பேர் அரசியல் கைதிகளாவார். 

ஏனைய பல தமிழ் கைதிகளுக்கு கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சிறைக்குள் இருந்த இந்தத் தகவல்களை உறுதி செய்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தொற்றுக்குள்ளாகியுள்ள கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, மருந்து என்பன மோசமாக உள்ளன என கைதிகளின் குடும்பத்தினர் எங்களிடம் கூறி கவலை வெளியிட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.  

இதனால் சிறையில் உள்ள கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ எனவும் குடும்பத்தினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளின் நிலைமை தொடர்பில் இலங்கையில் உள்ள ஐ.நா. தூதரகத்துக்கும் அறிவித்துள்ளதாக கஜேந்திரகுமார் கூறினார்.

நியூமகசீன் சிறைச்சாலையில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றினையடுத்து தமிழ் அரசியல் கைதிகளிடையே அச்சநிலை தோன்றியிருந்தது.

தற்போதைய சூழலை கருதியேனும் தம்மை பிணையில் வீடு செல்ல அனுமதிக்குமாறு அரசியல் கைதிகள் கோரியிருந்த போதும் அரசு கண்டுகொண்டிருக்கவில்லை.

இந்நிலையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்ட பலர் தொற்றுக்குள்ளாகியுள்ளமையால் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, சிறையில் உள்ள மருத்துவர் சிவரூபன் மற்றும் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் கண்ணதாசன் ஆகியோருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், இந்த நிலையிலாவது தமிழ் அரசியல் கைதிகளை பிணையிலேனும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ் அரசியல் கைதிகளின் 

விடுதலைக்காகப் போராடிவரும் குரலற்றோரின் குரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ் அரசியல்வாதிகள் இந்த விடயத்தை உடனடியாகக் கவகத்தில் கொண்டு 

செயற்பட வேண்டும் என குரலற்றோரின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அரசியல் கைதியான கோமகன் வலியுறுத்தியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு