SuperTopAds

பாதிரியார், கன்னியாஸ்திரிகளின் தகாத உறவு!! -நேரில் பார்த்த இளம் கன்னியாஸ்திரி கொலை-

ஆசிரியர் - Editor II

கேரளா மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி 19 வயதான அபயா என்பவர் அங்குள்ள பி.எம்.சி கல்லூரியில் கல்வி கற்பதற்காக செயின் பயஸ் கான்வென்ட்டில் தங்கியிருந்தார். 

கடந்த 1992 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் ஆண்டு இந்த கான்வென்ட் வளாகத்திலுள்ள கிணறு ஒன்றில் அபயா மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். 

அவர் தற்கொலை செய்து உயிரிழந்தாக தெரிவித்து பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை நடத்தினர். 

இருப்பினும் அபயா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மனித உரிமை ஆர்வலர் ஜோமோன் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த சி.பி.ஐ குழு நடத்திய விசாரணையில்தான் அபயா கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கொலையாளிகளை கண்டறிய  சி.பி.ஐ குழு அமைக்கப்பட்டது. 

இந்த குழுதான் அபயாவை பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருக்கயில் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்ததை கண்டுபிடித்தது.

பாதிரியார்களுக்கும் கன்னியாஸ்திரி செபிக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதை ஒரு முறை அபயா நேரில் பார்த்துள்ளார். தங்களின் தகாத உறவை அபயா வெளியே கூறி விடுவார் என்று பயந்து போன பாதிரியார்கள், கன்னியாஸ்திரி அபாயவை கான்வென்ட் வளாகத்தில் உள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளனர்.

2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க கேரள ஐகோர்ட்டை அணுக பாதிரியார் ஜோஸ் புத்ருக்கயில் மட்டும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார். 

மற்ற இருவர் மீதும் வழக்கு நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக இந்த வழக்கில் 177 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. பல்வேறு திருப்பங்களுடன் நடைபெற்ற இந்த வழக்கில் பல சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக மாறினர்.சிலர் தங்கள் சாட்சியத்தில் உறுதியாக நின்றனர்

அவர்களில், அபயாவின் ஆசிரியையான தெரசம்மா என்பவர் பல மிரட்டல்களை மீறி சி.பி.ஐ நீதிமன்றத்தில் சாட்சி அளித்தார். தெரசம்மா அளித்த சாட்சியத்தில் இரண்டு பாதிரியார்களும் பல கன்னியாஸ்திரிகளிடத்தில் தொடர்ந்து சில்மிசத்தில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்ததாக நீதிமன்றத்தில் கூறினார். 

அயலில் உள்ளவர்கள் வழங்கிய சாட்சியத்தில், இரண்டு பாதிரியார்களும் சுவர் ஏறி குதித்து கன்னியாஸ்திரிகள் வசிக்கும் பகுதிக்கு சென்றதை பார்த்துள்ளதாக தெரிவித்தனர். 

அதே போல, கான்வென்டுக்கு திருட வந்து மாட்டிக் கொண்ட ராஜூவும் என்பவனும் விசாரணையில் சேர்க்கப்பட்டிருந்தான். நீதிமன்றத்தில் ராஜூ அளித்த சாட்சியத்தில் இரு பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகள் இருந்த பகுதிக்குள் புகுந்ததை பார்த்ததாக கூறினான். இந்த வழக்கில் ஆழப்புலா அரசு வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவு தலைவர் லலிதாம்பா அளித்த சாட்சியும் முக்கியமானதாக அமைந்தது.

நீதிமன்றத்தில் லலிதாம்பா அளித்த சாட்சியத்தில் , 'செபியை கைது செய்ய போலீஸார் 2008 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி கன்னித்தன்மை பரிசோதனைக்காக என்னிடத்தில் அழைத்து வந்தனர். 

அப்போது, தான் கன்னித்தன்மையுடன் இருப்பது போல காட்டிக் கொள்வதற்காக செபி அறுவை சிகிக்சை செய்திருந்தை கண்டுபிடித்தேன்' என்றும் கூறினார். இதையடுத்து, வழக்கு விசாரணை சூடு பிடித்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்த சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சனில் குமார், பாதிரியார் தாமஸ் கோட்டூர். கன்னியாஸ்திரி செபி ஆகிர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை விவரங்கள் நாளை புதன்கிழமை அறிவிக்கப்படும்.