இரணைமடு குளத்தின் வடிநில பகுதிகளில் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

ஆசிரியர் - Editor I

இரணைமடு குளத்தின் நீரேந்து பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ள நிலையில் இரணைமடு வடிநில பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாயம் விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இந்த வெள்ள எச்சரிக்கையினை விடுத்திருக்கின்றுது. தற்போது இரணைமடு குளத்தின் 

நீர்மட்டம் 33 அடி 6 அங்குலமாக அதிகரித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் மாவட்டத்தின் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கு மேற்பட்ட 

மழைவீழ்ச்சி கிடைக்கலாம் எனக் கூறி உள்ளது எனவே நீர்ப்பாசன திணைக்களம் வெள்ள முன் எச்சரிக்கையை இரணைமடு குளத்தின் கீழ் பகுதிகளுக்கு விடுத்துள்ளது. 

இதன் பிரகாரம் முரசுமோட்டை, பன்னங்கண்டி, மருதநகர் , ஊரியான், கண்டாவளை மற்றும் கனகராயன் ஆற்றின் ஓரப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சில வேளைகளில் மழை வீழ்ச்சியின் தன்மையை பொறுத்து இன்று மாலை அல்லது நாளை வான் கதவுகள் திறப்பதற்கான சாத்தியப்பாடு உள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு