யாழ்.உடுவில் பகுதியை சேர்ந்த 100 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானது..
யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் இன்று சுமார் 120 போின் பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் எவருக்கும் தொற்றில்லை. என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
மேற்கண்டவாறு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுடன்
தொடர்புபட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 100 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த அவர்கள் 100 பேருக்கும் தொற்று இல்லை.
என அறிக்கை கிடைத்துள்ளது. அத்துடன், வவுனியா, மன்னார் வைத்தியசாலைகளில் இருந்து அனுப்பபட்ட சுமார் 20 போின் மாதிரிகளும் பரிசோதிக்கப்பட்ட நிலையில் வர்களுக்கும் தொற்றில்லை. என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.