SuperTopAds

யாழ்.மருதனார்மடம் கொத்தணியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வீரியம் கூடியது..! யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மூத்த விரிவுரையாளர் விளக்கம்..

ஆசிரியர் - Editor I

மருதனார்மடம் கொத்தணியில் பரிசோதிக்கப்பட்ட தொற்றாளர்களின் மாதிரிகள் பலவற்றில் காணப்படும் கொரோனா வைரஸ் இன் அளவு கூடுதலாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் வடக்கில் கண்டறியப்பட்ட வைரஸின் அளவு கூடுதலாக கணிக்கப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையைவிட கூடுதலாக உள்ளது மருதனார்மடம் கொத்தணி வேகமாக பரந்துபட்டு பரவுவதற்கு இது காரணமாக இருக்கலாம் என்று யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மூத்த விரிவுரையாளர் ஏ.முருகானந்தன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய மேற்கொள்ளப்படும் பி.சி. ஆர் பரிசோதனையானது வைரஸ் தொற்று உண்டு அல்லது இல்லை என்பதற்கு அப்பால் குறிப்பிட்ட நபரின் காணப்படும் வைரஸின் அளவை துல்லியமாக கணிக்க வல்லது என்று அவர் குறிப்பிட்டார்.

மருதனார்மடம் கொத்தணியில் பலருக்கு தொற்று ஏற்படுவதற்கான காரணம் என்ன என ஊடகங்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில் வடக்கில் கடந்த காலங்களில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மாதிரிகளில் காணப்பட்ட வைரஸின் அளவு அதிகமாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான தொற்றாளர்களில் இருந்து பிறிதொரு நபருக்கு மிக இலகுவாகவும் துரிதமாகவும் வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது இதனால் அது வேகமாக பரவுகின்றது.

கொரோனா வைரஸ் அளவு குறைந்த ஒருவரிடமிருந்து வெளியேறும் வைரஸ் கூறுகளின் அளவு குறைவாக இருப்பதனால் அவரிடமிருந்து பிரிதொரு நபருக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக காணப்படும். 

ஆனால் வைரஸ் அளவு கூடிய ஒருவருடன் சில நிமிடங்கள் முகக்கவசம் இன்றி உரையாடினாலேயே அந்த தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

பி சி ஆர் பரிசோதனை அறிக்கையில் மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடையதாக தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்களில் வைரஸ் அளவு கூடியவர்கள் தொடர்பில் அடையாளப்படுத்திய நாம் வழங்குகின்றோம். 

ஏனெனில் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு தொற்று பரவிவி இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றார். யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பி.சி.ஆர் சோதனைகளை முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றியவர் மூத்த விரிவுரையாளர் ஏ.முருகானந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.