இலங்கை அரசுக்கு கால அவகாசம் பெற்றுக் கொடுக்க துாதரகங்களுக்கு ஓடி திரிகிறாரா சுமந்திரன்..? சுரேஸ் குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I
இலங்கை அரசுக்கு கால அவகாசம் பெற்றுக் கொடுக்க துாதரகங்களுக்கு ஓடி திரிகிறாரா சுமந்திரன்..? சுரேஸ் குற்றச்சாட்டு..

இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் பெற்றுக் கொடுப்பதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பிரிட்டன் துாதரகத்தை நாடியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

யாழ் ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திற்கு பல கால அவகாசங்கள் வழங்கப்பட்ட நிலையில் 

மீண்டும் கால அவகாசத்தை பெற்றுக் கொடுக்கப் போகிறார்களா? என்ற கேள்வியும் எழுகின்றது.அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தின் பிரகாரம் ஐ.நாவில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பில் பிரித்தானியாவுடன் பேசுவதாக தெரிவித்திருந்தார்.

வழங்கப்பட்ட கால அவகாசத்தில் இலங்கை அரசானது உருப்படியாக எதனையும் நிறைவேற்றாத நிலையில் சுமந்திரன் சம்பந்தன் தரப்பினர் பிரித்தானியா தூதரகங்களுடன் எதனைப் பேசினார்கள் என்பது இதுவரை வெளியாகவில்லை.

எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் தான் ஆதரவு தெரிவித்த தீர்மானத்தில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.இலங்கை அரசுக்கு ஏற்கனவே 2015,2017.2019 முறையாக மூன்று கட்டங்களாக ஆறு வருட கால அவகாசத்தை இலங்கை அரசாங்கம் பெற்ற நிலையில் மீண்டும் 

ஒரு கால அவகாசத்தை வழங்குவதற்கு தமிழ் தரப்புகள் முயற்சிகள் செய்யுமானால் அது எதிர்க்கப்பட வேண்டிய விடயம்.இலங்கை அரசாங்கம் தான் நிறைவேற்றுவதாக கூறிய விடயங்களை நிறைவேற்றுவதற்கு அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் நின்று ஒருமித்த தீர்மானத்தை எடுக்க வேண்டும்.மேலும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் 

தமிழ் மக்களுக்காக வழங்கப்பட்ட ஒரே ஒரு பாரிய அபிவிருத்தி திட்டமான யாழ்ப்பாண விமான நிலையம் தற்போது செயல் இழக்கப்படப்போவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியக்கூடியதாக உள்ளது. இந்திய அரசாங்கத்தினால் குறித்த விமான நிலையத்தின் ஓடுபாதைகளை விஸ்தரிக்க 300 மில்லியன் ரூபா வழங்கப்பட்டபோதிலும் 

இதுவரை புனரமைப்பு வேலைகள் இடம்பெறவில்லை. கொழும்பு விமான நிலையத்தின் வருமான மார்க்கம் தடைப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் யாழ்ப்பாண விமான நிலையத்தின் பணிகளை இடை நிறுத்தப் போகிறார்களா என்ற சந்தேகம் வலுக்கிறது. 

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் அமைச்சர் டக்ளஸ் மற்றும் அங்கயன் ஆகியோர் அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்கி குறித்த திட்டத்தை செயற்படுத்த அதனை செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு