SuperTopAds

பிரதமரின் அலுவலகத்தை ஒன்லைனில் விற்க முற்பட்ட கும்பல்!! -பதறிய அதிகாரிகள்: 4 பேர் அதிரடியாக கைது-

ஆசிரியர் - Editor II
பிரதமரின் அலுவலகத்தை ஒன்லைனில் விற்க முற்பட்ட கும்பல்!! -பதறிய அதிகாரிகள்: 4 பேர் அதிரடியாக கைது-

வாரணாசியில் உள்ள பிரதமர் மோடியின் அலுவலகம் 7 கோடியே 50 இலட்சத்திற்கு விற்பனை என இணையத்தில் விற்பனை தளமான ஒ.எல்.எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

பிதமர் மோடியின் தொகுதி அலுவலகம் வாரணாசியின் ஜவகர் நகர் பகுதியில் உள்ளது. 6 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவை கொண்டது அந்த கட்டிடம்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் அந்த கட்டிடத்தை புகைப்படம் எடுத்த ஒரு கும்பல் அந்த புகைப்படத்தை இணையத்தில் விற்பனை தளமான ஒ.எல்.எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

மேலும், இந்த கட்டிடம் விற்பனைக்கு உள்ளது எனவும் அதன் விலை 7 கோடியே 50 இலட்சம் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மோடியின் வாரணாசி தொகுதி அலுவலக கட்டிடம் விற்பனைக்கு என இணையத்தில் புகைப்படம் பதிவிடப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து உத்தரபிரதேச பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் அலுவலக கட்டிட புகைப்படத்தை இணையத்தில் விற்பனை தளத்தில் பதிவேற்றம் செய்த 4 பேர் கொண்ட கும்பலை பொலிஸார் நேற்று கைது செய்தனர்.