சித்ரா வழக்கில் திடீர் திருப்பம்!! -அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரிக்க முடிவு-

ஆசிரியர் - Editor II
சித்ரா வழக்கில் திடீர் திருப்பம்!! -அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரிக்க முடிவு-

நடிகை சித்ரா உயிரிழந்த வழக்கு விசாரணைகளில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரிக்க ஆர்.டி.ஓ. முடிவு செய்துள்ளார்.

ஹேம்நாத்தை விசாரணைகாக ஆஜர்படுத்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ சிறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார். நேற்று முன்தினம் ஹேம்நாத்திடம் 8 மணி நேரம் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் சித்ராவுக்கு நெருக்கமானவர்கள், சித்ரா உயிரிழந்த விடுதியின் ஊழியர்கள், இறுதியாக சித்ராவுடன் பணியாற்றியவர்களிடம் இன்று சனிக்கிழமை விசாரணை செய்ய ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ முடிவு செய்து அவர்கள் ஆஜராக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.