விபத்தில் படுகாயமடைந்த 9 வயதான சிறுமி உயிரிழப்பு..! கடமையில் இருந்த மருத்துவர், மற்றும் ஊழியர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு..
விபத்தில் காயமடைந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர் உள்ளிட்ட வைத்தியசாலை ஊழியர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில்இ நீதவான் யு.ஊ.ரிஸ்வான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்த போது இடம்பெற்ற சம்பவங்களுடன் தொடர்புடைய வைத்தியர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து மன்றில் ஆஜராக்குமாறு இதன்போது நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தேத்தாதீவில் கடந்த 20 ஆம் திகதி லொறி ஒன்றில் மோதி 09 வயது சிறுமி பலத்த காயமடைந்தார்.காயமடைந்த சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
கதிரியக்கவியலாளர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமையால் விபத்திற்குள்ளான சிறுமிக்கு உயிர்காப்பு படங்களை பெற முடியாது போனதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்
டொக்டர் க.கலாரஞ்சனி அன்றைய தினமே ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி அறிவித்திருந்தார். இந்த நிலையில் கதிரியக்க பிரிவினர் அன்றைய தினம் கடமையிலிருந்த வைத்தியர்
உள்ளிட்ட சிலருக்கு மட்டக்களப்பு நீதவான் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளார்.