ஒரு பூச்சியம் "0" தவறியதால் 4 மாவட்ட மீனவர்களிடம் பகிரங்க மன்னிப்புகோரிய அமைச்சர் டக்ளஸ்..!
கடற்றொழிலாளர்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கு நிதி வழங்கும் நிகழ்வில் நிதி வழங்க முடியாமல்போனமைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 4 மாவட்ட கடற்றொழிலாளர்களிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
4 மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டம் தேவையான குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டத்திற்கான நிதி 1 லட்சம் ரூபாய் வழங்கும் நிகழ்வு இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றிருந்தது.
இதன்போது வீட்டுத்திட்டத்திற்கான ஒரு பகுதி நிதியாக 1 லட்சம் ரூபாய் வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஏற்கனவே மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பபட்ட குறித்த நிதி தொடர்பான அறிவித்தலில்
1 லட்சத்திற்கு பதிலாக 10000 என குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது ஒரு "0" தவறியதால் மாவட்ட செயலகங்கள் அந்த விடயத்தை திருப்பி அனுப்பி பிழை இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளன.
எனினும் இந்த விடயம் அமைச்சருக்கு கூறப்படவில்லை. இந்நிலையில் இன்று நிதி வழங்கும் கூட்டத்திலேயே அந்த விடயம் தெரிவிக்கப்பட்ட நிலையில் 4 மாவட்ட மீனவர்களிடமும் அமைச்சர் மன்னிப்பு கோரியுள்ளதுடன்
விரைந்து அந்த நிதியை பெற்று தருவதாக உத்தரவாதம் கொடுத்தார்.