ஆபாச நடிகைக்கு தலைமை நிர்வாக அதிகாரியுடன் இரகசிய தொடர்பு!! -முடக்கப்பட்டது இன்ஸ்டாகிராம் பக்கம்-
இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுடன் பிரபல ஆபாச பட நடிகை கேந்திர சுந்தர்லேண்ட் தனக்கு ரகசிய உறவு உள்ளதாக தெரிவித்ததை அடுத்து அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 25 வயதான ஆபாச திரைப்பட நடிகையான கேந்திர சுந்தர்லேண்ட் அண்மையில் சமூக வலைதள பக்கத்தில், இன்ஸ்டாகிராமின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆடம் மொசெய்ரியுடன் தனக்கு இரகசிய உறவு இருப்பதாக தெரிவித்தார்.
அது எப்படி ஏற்பட்டது என்று கூறிய அவர் தனது ஆபாச புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாவதற்கு அவர்தான் காரணம் என்றும், அதனால், தனக்கு இந்த பாக்கியம் கிடைத்ததாகவும் தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து இன்ஸ்டாகிராம் நிறுவனம், கேந்திர சுந்தர்லேண்டின் இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கியுள்ளது.