யாழ்.மாவட்டத்தில் 93 கொரோனா நோயாளிகள் இன்று மாலைவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்..! 1400 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 93 கொரோனா நோயாளிகள் இன்று மாலைவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்..! 1400 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்..

யாழ்.மாவட்டத்தில் ஒக்டோபர் மாதம் 4ம் திகதி தொடக்கம் இன்று மாலை வரையில் சுமார் 93 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக கூறியிருக்கும் யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் மாவட்டத்தில் 1400 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். 

மாவட்டத்தின் சமகால கொரோனா நிலமைகள் குறித்து இன்று ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், கொரோனா பாதிக்கப்பட்ட 88 பேர்,

சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இன்று சுன்னாகம் பொதுச் சந்தை வியாபாரிகள் இருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

ஒக்டோபர் 4ஆம் திகதிக்குப் பின்னர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோரோனா வைரஸ் தொற்று நிலமைகளைக் கருத்திற் கொண்டு தனிமைப்படுத்தல் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. 

அதனடிப்படையில் இன்று மாலை நிலவரப்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஆயிரத்து 400 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 818 பேர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 300 குடும்பங்களும் 

தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 215 குடும்பங்களும் கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 181 குடும்பங்களும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன. ஏனைய பிரிவுகளிலும் குறிப்பிட்டளவு குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் இன்று மாலை வரை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 93 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 21 பேர் முழுமையாகச் சுகமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.

சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 10 ஆயிரம் பெறுமதியான உணவுப்பொருள் பொதி இரண்டு கட்டங்களாகப் பிரித்து வழங்கப்படும்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருபவர்களில் அலுவலகப் பணி தவிர்ந்த அனைவரும் 

சுயதனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுவார்கள். இறுதிச் சடங்குகளில் 25 பேருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு