SuperTopAds

வவுனியா வடக்கு கல்வி வலய மோசடி..! 200 பக்க விசாரணை அறிக்கை பிரதம செயலரிடம், பல பெருச்சாளிகள் பொறிக்குள்..

ஆசிரியர் - Editor I

வவுனியா  வடக்கு கல்வி வலயத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான விசாரணை குழுவின் அறிக்கை வடமாகாண பிரதம செயலாளரிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது. 

மேற்குறித்த கல்வி வலயத்தில் பணியாற்றி பின்னர் இடமாற்றம் பெற்றுச் சென்றிருந்த ஊழியர் ஒருவரும் மேலும் சிலரும் இணைந்து சுமார் ஒரு கோடிக்கும் மேல் மோசடி செய்ததை

மாகாண கணக்காய்வு குழு விசாரணைகளில் தற்செயலான விசாரணையில் கண்டு பிடித்திருந்தது. இதன்போது சுமார் ஒரு கோடியே 50 லட்சத்திற்கும் அதிகமான பணம் 

மோசடி செய்யப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த மோசடி சம்பவம் தொடர்பாக, 

மூவர் கொண்ட விசாரணை குழு ஒன்றை மாகாண பிரதம செயலாளர் அறிவுறுத்தலின் பிரகாரம் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டிருந்ததுடன், 

200 பக்கங்களை கொண்ட விசாரணை அறிக்கை பிரதம செயலாளரிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் முன்னர் கூறப்பட்டதை காட்டிலும் அதிகளவான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.