SuperTopAds

வகுப்பறைக்குள் வைத்து 5 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்!! -தலைமறைவான ஆசிரியரை தேடும் பொலிஸ்-

ஆசிரியர் - Editor II

தெலுங்கானா மாநிலத்தில் அரச பாடசாலைக்குள் வைத்து ஐந்து சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தை செய்த பாடசாலையின் தலைமை ஆசிரியரியரை பொலிஸார் தேடி வருகின்றனர். 

அம்மாநிலம் பத்ராத்ரி கோத்தகுடெம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரச ஆரம்பப் பாடசாலையின் தலைமை ஆசிரியர், 7 வயது முதல் 11 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகளை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பாடசாலைக்குள் வைத்தே பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதை தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இருப்பினும் இந்த கொடுமைகளை செய்த தலைமை ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ஐ.சி.டி.எஸ்) அதிகாரிகளுடன் போலீசார் பாதிக்கபட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு முன், 40 வயதான  தலைமை ஆசிரியர் சிறுமிகளுக்கு ஆபாச படத்தை பார்க்கும்படி கட்டாயப்படுத்தி உள்ளார். இது குறித்து வெளியே சொன்னால் அவர்களை கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டியும் உள்ளார்.