SuperTopAds

ரஜினியின் மக்கள் சேவை கட்சிக்கான பாபாவின் முத்திரை சின்னம் நிராகரிப்பு!! -ஆட்டோ சின்னத்தை வழங்கிய தேர்தல் அலுவலகம்-

ஆசிரியர் - Editor II
ரஜினியின் மக்கள் சேவை கட்சிக்கான பாபாவின் முத்திரை சின்னம் நிராகரிப்பு!! -ஆட்டோ சின்னத்தை வழங்கிய தேர்தல் அலுவலகம்-

இன்று செவ்வாய்க்கிழமை காலை சூப்பஸ்டார் ரஜினி தனது அரசியல் பிரவேசத்திற்கான மக்கள் சேவை கட்சியை பதிவு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் அந்தகட்சியின் நிறுவனராக ரஜினிகாந்த்தின் பெயர் இடம் பெற்றிருப்பதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ரஜினி கட்சியின் பெயர் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் “மக்கள் சேவை கட்சி” என்ற பெயர் சூட்டப்பட்டிருப்பது தேர்தல் ஆணையம் மூலம் தெரிய வந்திருக்கிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேர்தல் ஆணையம் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி வெளியிட்ட பட்டியலில் எர்ணாவூரை தலைமையிடமாக கொண்டு “அனைத்திந்திய மக்கள் சக்தி கழகம்” என்ற கட்சிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள தகவல் வெளியானது. அந்த கட்சியை “மக்கள் சேவை கட்சி” என்று பெயர் மாற்றம் செய்வதற்கு 2½ மாதங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவை ஏற்றுக்கொண்டு கட்சியின் பெயரை “மக்கள் சேவை கட்சி” என்று மாற்றுவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. 234 தொகுதிகளிலும் இந்த கட்சி போட்டியிடும் என்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ரஜினியின் இந்த புதிய கட்சிக்கு தேர்தல் சின்னத்தையும் தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. தேர்தல் சின்னமாக “ஆட்டோ” தேர்வு செய்து ஒதுக்கப்பட்டுள்ளது. ரஜினி தரப்பில் “பாபாவின் முத்திரை” சின்னத்தை ஒதுக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.