யாழ்.கொடிகாமத்தில் ஆரம்ப பிரிவு பாடசாலை ஒன்றை பொலிஸாரின் தனிமைப்படுத்தலுக்காக வழங்கிய மாகாண கல்வியமைச்சு..! மக்கள் விசனம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமத்தில் ஆரம்ப பிரிவு பாடசாலை ஒன்றை பொலிஸாரின் தனிமைப்படுத்தலுக்காக வழங்கிய மாகாண கல்வியமைச்சு..! மக்கள் விசனம்..

யாழ்.கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப பாடசாலையை விடுமுறையில் நின்று கடமைக்கு திரும்பும் பொலிஸாரின் சுய தனிமைப்படுத்தலுக்காக பயன்படுத்த வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன்  வழங்கப்பட்டமை  அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் கொடிகாமப் பொலிஸில் கடமையாற்றும் பொலிஸாரே இவ்வாறு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

விடுமுறை பெற்றுச் செல்லும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைக்கு திரும்புவதற்கு முன்னர் சுயதனிமைப் படுத்தலுக்காக குறித்த பாடசாலையில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலை தரம் 1 தொடக்கம் தரம் 5 வரையான ஆரம்ப பாடசாலையாக காணப்படுவதால் குறித்த பாடசாலையில் தங்கும் பொலிசாருக்கு பீசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 

கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்படுமாயின் குறித்த மாணவர்களின் கல்வி செயற்பாட்டிற்கு எவ்வாறு மாணவர்கள் பயன்படுத்த முடியும் என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது குறித்த பாடசாலையில் தங்கியுள்ள பொலிஸார் பாடசாலைக்கு வெளியில் நடமாடுவதாகவும் அவர்களுக்கு தேவையான உணவுகள் பெரும்பாலும் வெளி இடங்களில் இருந்து கொண்டு வரப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண கல்வி உயர் அதிகாரி ஒருவருடன் தொடர்பு கொண்ட போது குறித்த பாடசாலை பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய வடக்கு கல்வி அமைச்சின் செயலாளரால் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு