யாழ்.மாவட்டம் முற்றாக முடக்கப்படுகிறதா..? மாவட்டத்தின் பல பகுதிகளில் தொற்றாளர்கள் யாழ்.மாவட்ட செயலர் விளக்கம்..!

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் மாவட்டத்தை முற்றாக முடக்கும் தீர்மானம் எதுவும் இல்லை. என கூறியிருக்கும் யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் மாவட்டத்தில் 1144 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தொிவித்துள்ளார். 

சமகால நிலமைகள் குறித்து இன்று நண்பகல் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் மேலும் கூறுகையில், யாழ்ப்பாணத்தில் நேற்று 26 பேர் அடையாளம் காணப்பட்டனர். கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதிக்குப் பின்னர் 59 கோரோனா தொற்றாளர்கள் 

அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 18 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 31 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 744 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில் இருந்தனர். 

மருதனார்மடம் கோரோனா வைரஸ் பரவல் கொத்தணியை அடுத்து மேலும் 400 குடும்பங்கள் கடந்த மூன்று நாள்களில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் மொத்தமாக ஆயிரத்து 144 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

பரவலாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதால் உடுவில் பிரதேசத்தை மாத்திரம் தனிமைப்படுத்துவது பயண்தராது என்பதால் விடுக்கப்பட்டுள்ளது. எனினும் மருதனார்மடம் பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டிய வர்த்தக நிலையங்கள் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளன.

தெல்லிப்பளை உடுவில் கல்விக் கோட்டங்களை மாத்திரம் மூடுவது பயண்தருமா என்பதை கல்வி அமைச்சே தீர்மானிக்கும். யாழ் மாவட்டத்தை முழுமையாக முடக்கும் தீர்மானம் இல்லை. கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டபோதும் 

கொழும்பு மாவட்டம் முடக்கப்படவில்லை. அது போலவே யாழ் மாவட்டம் முடக்கப்படாது,என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு