சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன்!! -கமலஹாசன் அதிரடி அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன்!! -கமலஹாசன் அதிரடி அறிவிப்பு-

நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் போட்யிட உள்ளதாக தெரிவித்துள்ள கமலஹாசன் ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து நேரம் வரும்போது முடிவு செய்யப்படும் கூறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் இன்று திங்கட்கிழமை 2 ஆவது நாளாக மதுரையில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். 

பிரசாரத்தின் மத்தியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேர்தல் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்து கமல் பேசியதாவது:-

நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவேன். எந்த தொகுதியில் போட்டி என்ற விவரம் பின்னர் அறிவிக்கப்படும். 

ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து நேரம் வரும்போது முடிவு செய்யப்படும். வரும் 31 ஆம் திகதி ரஜினி கட்சி அறிவிப்பு வரும் வரை பொறுத்திருங்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் முற்றிலும் கூடாது என்பது மடமை என்றார்.