SuperTopAds

3 பிள்ளைகளுடன் தற்கொலை செய்த குடும்பம்!! -வட்டிக்கு வாங்கிய பணத்தை செலுத்த முடியாததால் பரிதாப மரணம்

ஆசிரியர் - Editor II

வட்டிக்கு வாங்கிய பணத்தினை மீண்டும் கொடுக்க முடியாது அவதிப்பட்டதால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

விழுப்புரம் அருகே வளவனூர் பொலிஸ்சரகம் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த தட்டச்சு தொழிலாளியானா மோகனும், இவரது மனைவி விமலா ஈஸ்வரியும், அவர்களின் 3 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.

மோகன் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். இன்று காலை நீண்டநேரமாகியும் மோகனின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி அவர்களை எழுப்ப முயன்றனர். ஆனால் கதவை எவரும் திறக்கவில்லை.

உடனே அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மோகன் மற்றும் அவரது மனைவி விமலா ஈஸ்வரி மற்றும் 3 குழந்தைகள் ஆகிய 5 பேரும் தூக்கில் பிணமாக தொங்கினர்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக வளவனூர் பொலிஸாருக்கி தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த பொலிஸார் 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

மோகனுக்கு கடந்த சில மாதங்களாக சரிவர வேலை இல்லாத காரணத்தால் அந்த பகுதியை சேர்ந்த சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருந்தார். வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மோகன் அவதிபட்டு வந்தார்.

எனவே கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி மோகனின் வீட்டிற்கு வந்து கொடுத்த கடனை திருப்பிகேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த மோகன் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவுசெய்தார். அதனை மோகன் தனது மனைவி விமலா ஈஸ்வரியிடம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து கணவன்-மனைவி 2 பேரும் சேர்ந்து வீட்டில் தூங்கிகொண்டிருந்த குழந்தைகள் 3 பேரையும் ஒவ்வொருவராக தனிஅறைக்கு தூக்கி சென்று தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தனர். அதன் பின்னர் மோகனும், அவரது மனைவி விமலா ஈஸ்வரியும் அதே அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண் டனர். மேற்கண்ட தகவல்கள் பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.