யாழ்.மாவட்டத்தில் நேற்று 36 பேருக்கு தொற்று உறுதி தேசிய செயலணி உறுதிப்படுத்தியது..! உண்மை தகவல்களை மறைப்பது குற்றமாகும் எனவும் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையை மறைப்பதும், கொரோனா தொற்றாளர்கள் தலைமறைவாகி திரிவதும் குற்றமாகும். அதிகாரிகளும், கொரோனா தொற்றாளர்களும் அசமந்த போக்கில் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க முடியும். 

மேற்கண்டவாறு கொரோனா தடுப்புக்கான தேசிய செயலணியின் தலைவரும், இராணுவ தளபதியுமான லெப்டினட் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, அதிகாரிகளும், கொரோனா தொற்றாளர்களும் சமூகத்தின் நன்மை கருதி செயற்படவேண்டும். 

யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதாக கொரோனா தடுப்புக்கான தேசிய செயலணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தனது முகநுாலில் 6 பேருக்கே தொற்று என கூறியுள்ளார். 

மேலும் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம். எனவும் கூறியிருக்கின்றார். இந்த எண்ணிக்கை குழப்பம் தொடர்பாக கொரோனா தடுப்பு தேசிய செயலணியின் தலைவர் சவேந்திர சில்வாவிடம் ஊடகம் ஒன்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

மேலும் யாழ்.மாவட்டத்தில் 36 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். 6 பேருக்கே தொற்று என ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது. ஊடகங்களுக்கு தொற்றாளர் எண்ணிக்கையை குறைத்து எதற்காக கூறப்பட்டது? என்பது தொடர்பில் தேசிய செயலணி கவனம் செலுத்தும். 

கொரோனா என்பது கொடிய நோய். இந்த விடயத்தில் சுகாதார பிரிவினரும், பொதுமக்களும் அவதானத்துடன் செயற்படவேண்டும். கொரோனா அற்ற ஆண்டாக மலரவேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்புமாகும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு