SuperTopAds

சித்ராவை காதலில் சிக்கவைத்த கொரோனா ஊரடங்கு!! -வெளிவரும் புதிய தகவல்-

ஆசிரியர் - Editor II

நடிகை சித்ரா ஈ.சி.ஆர். சாலையில் உள்ள வெட்டுவாங்கேணியில் உள்ள அபார்ட்மெண்டில் தங்கி இருந்தார்.

அந்த வீட்டின் இன்னொரு பகுதியில் தான் ஹேம்நாத் தங்கி இருந்தார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் இன்றி வீட்டில் இருந்த சித்ராவுக்கும் ஹேம்நாத்துக்கும் இடையே  அப்போது தான் காதல் மலர்ந்தது.

இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆகஸ்டு மாதம் எளிமையான முறையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து ஜனவரியில் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அவர்கள் அக்டோபர் 19 ஆம் திகதி இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக ஹேம்நாத் பொலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு சித்ராவின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.