SuperTopAds

மருதனார்மடம் சந்தையை மூடுவதா? நாளை மாவட்ட கொரோனா செயலணி அவசரமாக கூடுகிறது..! நேரடி தொடர்பில் இருந்தவர்களுக்கு நாளை பீ.சி.ஆர் பரிசோதனை..

ஆசிரியர் - Editor I

யாழ்.மருதனார்மடம் சந்தையில் வியாபாரம் செய்வதுடன் ஆட்டோ ஓட்டும் 39 வயதான ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் குறித்த நபருடன் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தி பீ.சி.ஆர் பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேற்படி தகவலை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார். இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், தொற்றுக்குள்ளான நபருடன் நேரடியாக தொடர்புடையவர்களை உடனடியாக அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களுக்கு நாளைவே பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. 

மருதனார்மடம் சந்தையில் மரக்கறி கடை வைத்துள்ள ஒருவர் பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டிவரும் நிலையில் அந்த பகுதியில் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகளிடம் எழுமாற்றாக பி.சி.ஆர்.சோதனை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட நபரும் முச்சக்கர வண்டி வைத்திருப்பவர் என்ற அடிப்படையில், பி.சி.ஆர்.சோதனைக்குட்படுத்தப்பட்டபோதே தொற்று உறுதியானது.

இவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் உறுதியாகவில்லை. எனினும் அவருடன் நேரடித் தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்தி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையினை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். மருதனார் மடத்தில் தொற்றுக்குள்ளானவர் சகல பிரதேசங்களிலும் நடமாடியுள்ளதாக 

அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாளையதினம் அவருடன் தொடர்பு பட்டவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதோடு அதனடிப்படையில்குறித்த சந்தையினை மூடுவதா? அப்பகுதியைமுடக்குவதா என்பது தொடர்பில் மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி ஆராய்ந்து முடிவெடுக்கும் எனவும் தெரிவித்தார்.