SuperTopAds

சித்ரா தற்கொலைக்கு காரணம் யார்? பொலிஸார் வெளிட்ட திடுக்கிடும் தகவல்!! -3 நாட்களாக கணவரிடம் தீவிர விசாரணை-

ஆசிரியர் - Editor II

உயிரிழந்த நடிகை சித்ராவின் தற்கொலைக்கு யார் காரணம் என்பது குறித்து பொலிஸ் தரப்பில் தற்போது திடுக்கிடும் தகவல் சில வெளியிடப்பட்டுள்ளது. 

அவரை தற்கொலைக்கு தூண்டியது யார் என்ற கோணத்தில் தற்போது பொலிஸார் மேலதிக விசாரணையை நடத்தி வந்தனர். 

இந்நிலையில், சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் மற்றும் தாய் தரப்பில் கொடுக்கப்பட்ட மன அழுத்தமே முக்கிய காரணம் என பொலிஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹேம்நாத்தை பிரிந்து வருமாறு சித்ராவின் தாய் விஜயா தொடர்ந்து கூறி வந்ததால் சித்ராவிற்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சித்ராவின் கணவர் ஹேம்நாத் குடித்துவிட்டு, படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அவரிடம் சண்டையிட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்றும் அவரை விசாரிக்க பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். அதேபோல் சித்ராவின் தாயாரிடமும் பொலிஸார் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.