பேருந்துகளில் வந்திறங்கிய 33 யாசகர்கள் திருப்பி அனுப்பபட்டனர்..! சுகாதார பிரிவு அதிரடி நடவடிக்கை..
மன்னார் மாவட்டத்திற்கு யாசகம் எடுக்கும் நோக்கில் வெளி மாவட்டங்களில் இருந்து பேரூந்தில் வந்திறங்கிய 33 யாசகர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்
மகியங்களை, புத்தளம், பொலநறுவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாராந்தம் வியாழக்கிழமைகளில் மன்னார் நகர கடைகளில் யாசகம் பெறும் நோக்கில்
அதிகளவானோர் வருகை தந்து சகல வர்த்தக நிலையங்களிற்கும் ஏறி இறங்குவதனால் கொரோனா அச்சம் தொடர்பில்
மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலில் சுட்டிக் காட்டப்பட்டது.
நாட்டில் நிலவும் கொரோனா அச்சம் திணியும் வரையில் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதாக தீர்மானிக்கப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு ஏற்பவே நேற்றைய தினம் மன்னார் நகரிற்கு பேரூந்தில் வந்து இறங்கிய யாசகர்கள் அனைவரும் அறிவுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்த நடவடிக்கையில் பொலிஸார், பொதுச் சுகாதார உத்தியோகத்தர், பிரதேச செயலாளர், கிராம சேவகர் எனப் பலரும் இணைந்து ஈடுபட்டனர்.