3 வில்லன்களுடன் டூப் இல்லாமல் சண்டை செய்த வரலட்சுமி!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக தற்போது வலம் வரும் வரலட்சுமி சரத்குமார் புதிதாக நடிக்கும் ஒரு படத்தில் டூப் இல்லாமல் சண்டை காட்சியை தானே நடித்துள்ளார்.
அவரின் கைவசம் தற்போது காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை, சேசிங், ஆகிய தமிழ் திரைப்படங்கள் உள்ளன. தெலுங்கிலும் இவருக்கு நந்தி, கிராக் ஆகிய படங்களும் கன்னடத்தில் ரணம் என மொத்தம் 9 படங்கள் உள்ளன. மேலும் இவரது நடிப்பில் சேசிங் திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாக உள்ளது இந்த படத்தில் வரலட்சுமி ஒரு போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
கே வீரக்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகள் அனைத்திற்கும் நடிகை வரலட்சுமி டூப் போடாமலேயே நடித்து தன் திறமையை காட்டியுள்ளார். 3 வில்லன்கள் உள்ள இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.