SuperTopAds

சித்ராவின் முகத்தில் இருந்தது நக கீறல் காயங்கள்!! -வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை-

ஆசிரியர் - Editor II

சித்ரா தற்கொலை செய்து கொண்டே உயிரிழந்துள்ளார் என்று பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று வியாழக்கிழமை காலை சித்ராவின் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை தான் என போலிசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவரது கன்னத்தில் இருந்த நகக்கீறல்களும் சித்ராவின் நகக்கீறல்கள்தான் என அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

தற்கொலை என தெரியவந்துள்ளதால், அதற்கு யார் காரணம் என்ற கோணத்தில் அடுத்தகட்ட விசாரணையை நடத்த போலிசார் திட்டமிட்டுள்ளனர்.