முல்லைத்தீவு கடற்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய இழுவை படகுகள்..! நாங்களும் அருகில் செல்ல மாட்டோம், நீங்களும் செல்லகூடாது வேடிக்கை பார்த்த கடற்படை..
முல்லைத்தீகு கடற்கரையிலிருந்து வெற்கு கண்களால் பார்க்ககூடிய துரம்வரை இந்திய இழுவைப் படகுகள் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக கடற்கரையில் இருந்து சுமர் 2 கிலோமீற்றர் தூரத்திற்குள், அத்துமீறி நுழைந்து கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தமையினை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.
இதுதொடர்பில் முல்லைத்தீவு மீனவர்கள் கடற்படையினருக்குத் தெரியப்படுத்தியபோதும், கொரோனா அச்சம் காரணமாக இந்தியன் இழுவைப் படகுகளுக்கு அருகே செல்லமுடியாதென
கடற்படையினர் மறுப்புத்தெரிவித்துள்ளதுடன், மீனவர்களையும் இந்தியன் இழுவைப்படகுகளுக்கு அருகே செல்லக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.
இந் நிலையில் முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சமாசத்தலைவர் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், இந்தியஇழுவைப்படகுகள் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக
எமது கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுவருகின்றனர்.இந்திய இழுவைப்படகுகள், இழுவை முடிகளைப் பயன்படுத்தி தமது கடற்றொழில் செயற்பாடுகளை முன்னெடுப்பதால்
முல்லைத்தீவுக் கடல்வளம் பாதிக்கப்படுவதுடன், எமது மீனவர்களின் வாழ்வாதாரமும் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது. இதேவேளை இந்திய இழுவைப் படகுகளால் முல்லைத்தீவு மீனவர்களின் வலைகள் சேதப்படுத்தப்பட்டும் வருகின்றது.
இது தொடர்பில் கடற்படையினர், மற்றும் உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும், இதுதொடர்பில் எவரும் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க முன்வருவதில்லை.
இந் நிலையில் நாளுக்குநாள் இந்தியமீனவர்களின் வருகை அதிகரித்துள்ளதுடன், அவர்கள் தற்போது எமது கடற்கரையினை அண்மித்து வருகைதரும் அளவிற்குத் துணிந்துள்ளனர்.
எனவே இச்செயற்பாட்டினை முடிவுக்குக் கொண்டுவர விரைவில்நாம் போராட்டத்தில் ஈடுபடவும் தீர்மானித்துள்ளோம்.