SuperTopAds

உயிரிழந்த சித்ராவின் முகத்தில் 2 காயங்கள்!! -துருவித் துருவி விசாரிக்கும் பொலிஸ்-

ஆசிரியர் - Editor II

தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நடிகை சித்ராவின் முகத்தில் 2 இடங்களில் காயம் உள்ளதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.

வலது பக்க கன்னத்திலும், நாடி பகுதியிலும் காயங்கள் உள்ளன. இதுபற்றி போலீசாரிடம் கேட்ட போது, இந்த காயங்கள் எப்படி ஏற்பட்டன என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

தற்கொலை செய்த போது அறையில் சித்ராவின் வருங்கால கணவரான ஹேம்நாத் மட்டுமே உடன் இருந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.

சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஹேம்நாத்திடம் கருத்து வேறுபாடு காரணமாக தகராறில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றியும் ஹேம்நாத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சித்ரா கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. பிரேத பரிசோதனையில்தான் சித்ரா மரணம் அடைந்தது எப்படி? என்பது உறுதியாக தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன் பிறகே சித்ரா தற்கொலை வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் என்றும் போலீசார் கூறினார்கள்.