SuperTopAds

காதலித்து இணைந்த இளம் ஜோடி!! -தேனிலவுக்கு முன் காதலை வளர்த்த கடற்கரையை சுத்தம் செய்து முன்னுதாரணம்-

ஆசிரியர் - Editor II
காதலித்து இணைந்த இளம் ஜோடி!! -தேனிலவுக்கு முன் காதலை வளர்த்த கடற்கரையை சுத்தம் செய்து முன்னுதாரணம்-

கர்நாடக மாநிலம் பைண்டூரை சேர்ந்தவர்கள் அனுதீப் ஹெக்டே-மினுஷா காஞ்சன் ஆகிய இருவரும் காதலித்து கடந்த நவம்பர் 18 ஆம் திகதி திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்துக்கு பின்னர் தேனிலவுக்கு செல்லும் முன் தங்கள் காதலை வளர்த்த சோமேஷ்வரா கடற்கரையை சுத்தம் செய்ய திட்டமிட்டனர்.

இதன்படி அந்த கடற்கரையில் குப்பை கூழங்கள், மதுபாட்டில்கள், கழிவுகள் நிறைந்து காணப்பட்டது. திருமணத்துக்கு பின்னர் அவர்கள் தினமும் சென்று கடற்கரையில் குவிந்து கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தினர்.

ஆரம்பத்தில் இவர்களது பணியை அப்பகுதிக்கு பொழுதுபோக்க வந்தவர்கள் வேடிக்கையாக பார்த்து சென்றனர். பின்னர் இளைஞர்கள் சிலர் அவர்களோடு சேர்ந்து குப்பைகளை சேகரித்து சுத்தம் செய்துள்ளனர்.