வடக்கில் ”புரவி” புயலால் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு என்கிறது அனர்த்த முகாமைத்துவ நிலையம்..! முழுமையான தகவல்கள் வெளியீடு..
“புரவி” புயல் மற்றும் சீரற்ற காலநிலையினால் வடமாகாணத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதுடன், 98 வீடுகள் முழுமையாகவும் 3414 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்திருப்பதாக அநர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
யாழ்ப்பாணம்
யாழ்.மாவட்டத்தில் 22620 குடும்பங்களைச் சேர்ந்த 74 ஆயிரத்து 995 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்து உள்ளனர். மாவட்டத்தில் 93 வீடுகள் முழுமையாகவும் 2 ஆயிரத்து 963 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
765 வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, 358 குடும்பங்களைச் சேர்ந்த 1340 பேர் 21 இடைத்தங்கல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் 2227 குடும்பங்களைச் சேர்ந்த 7784 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு முழுமையாகவும் 72 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 464 பேர் இடைத்தங்கல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தில் 926 குடும்பங்களைச் சேர்ந்த 5668 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று வீடுகள் முழுமையாகவும் 276 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. 4 வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இரு இடைத்தங்கல் முகாம்களில் 88 குடும்பங்களைச் சேர்ந்த 134 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் 703 குடும்பங்களைச் சேர்ந்த 2051 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 வீடுகள் பகுதியளவில் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
வவுனியா
வவுனியா மாவட்டத்தில் 137 குடும்பங்களைச் சேர்ந்த 424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 57 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது