தொடரும் கனமழை, வெள்ளத்தில் மூழ்கும் நிலையில் யாழ்ப்பாணம்..! யாழ்.அரச அதிபர் தலமையில் போிடர் தவிர்ப்பு கூட்டம், இராணுவம் அழைப்பு..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள பெருக்கு அபாயம் எழுந்துள்ள நிலையில் வெள்ள பெருக்கை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் மற்றும் யாழ்.மாநகர முதல்வர் இ.ஆனல்ட் ஆகியோர் கூட்டாக கோரிக்கை விடுத்திருக்கின்றனர். 

மாவட்டத்தில் தற்போது பாரிய பிரச்சினையாக எழுந்திருக்கும் வெள்ள அபாயம் குறித்து இன்று யாழ்.மாவட்ட செயலர் மற்றும் யாழ்.மாநகர முதல்வர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஆகியன இணைந்து அனர்த்த நிலமைகள் குறித்த உயர்மட்ட கலந்துரையாடலை மேற்கொண்டிருக்கின்றனர். 

இதன்போது மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது. புரவி தாக்கத்தினால் யாழ்.மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் வெள்ளத்தின் தாக்கத்தினால் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் வசிக்கும் மக்களின் நிலை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

கூட்டத்தில் மேலதிக அரசாங்க அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்.மாநகர முதல்வர் இ.ஆனல்ட், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா, பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், சுகாதார துறையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கலந்து கொண்டனர்.

குறித்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்யாழ்ப்பாண மாவட்டத்தில் புரவி புயல் ஏற்படுத்திய தாக்கம் குறித்து அதனுடைய தாக்கத்தை மதிப்பீடு செய்வதற்கும் அதேபோல் இயல்பு நிலையை மீள கட்டியெழுப்புதல் நிவாரண நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக 

இன்றைய ஒரு அவசர கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதற்கு அத்தியாவசிய பங்காளர்களை மாத்திரம் அழைத்து கலந்துரையாடினோம் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதிக வெள்ளம் காரணமாக வீடுகளில் தங்க முடியாதவர்கள் 

தங்க வைக்கப்பட்டுள்ள பாடசாலைகளை, தற்காலிக நலம்புரி நிலையங்களை மூடி அல்லது இடம் மாற்றி பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் அதேபோல பாடசாலைகளை சுத்தப்படுத்தி இயல்பு நிலையை மீள ஆரம்பித்தல் அதேநேரம் சுகாதார நடவடிக்கைகளை 

அங்கு உறுதிப்படுத்திக் கொள்ளுதல் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு