SuperTopAds

வெள்ளத்தை வேடிக்கை பார்க்க சென்றபோது நீரில் அடித்து செல்லப்பட்டு காணமல்போன இளைஞன் 3 நாட்களின் பின் சடலமாக மீட்பு..!

ஆசிரியர் - Editor I

வவுனியா - புதுக்குளத்தில் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில் குளத்தை வேடிக்கை பார்க்க சென்றிருந்தபோது நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல்போன இளைஞன் 3 நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

புரவி புயல் காரணமாக கனமழை பெய்த நிலையில் புதுக்குளத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் குளத்தை பார்ப்பதற்காக பெருமளவு மக்கள் கூடிய நிலையில் குறித்த இளைஞனும் தன்னுடைய நண்பர்களுடன் 

வேடிக்கை பார்ப்பதற்கு சென்றிருந்தபோது வாய்க்காலில் இறங்கி வியைாடியுள்ளார். இதன்போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன நிலையில் மிகுந்த சிரமத்தின் மத்தியில் கடந்த 2 நாட்களாக தேடுதல் நடத்தப்பட்டது. 

இந்நிலையில் இன்று காலை 6.12 மணிக்கு காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் தோணிக்கல் பகுதியை சேர்ந்த வவுனியா விபுலானந்தா கல்லுாரி மாணவனே இவ்வாறு

சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.