SuperTopAds

மன்னார் வளைகுடாவில் வலு இழக்கிறது

ஆசிரியர் - Editor I

மன்னார் வளைகுடா பகுதியில் குறைந்த காற்றழுத்த பகுதியாக பலவீனமடைந்துவரும் "புரவி" புயலின் தாக்கம் படிப்படியாக குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேற்கு மற்றும் சபராகமுவா மாகாணங்களில் ஒரு சில இடங்களில், குறிப்பாக காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு வேறு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

காற்று:

நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் தென்கிழக்கு முதல் தென்மேற்கு வரை காற்று வீசக்கூடும் என்பதுடன் காற்றின் வேகம் (30-40) கி.மீ. வரை காணப்படும்.

காங்கேசன்துறை தொடக்கம் புத்தளம் வரை மன்னார் வழியான கடல் பகுதி முழுவதும் காற்றின் வேகம் 50 கி.மீ வேகத்தில் அதிகரிக்கக்கூடும்.

கடல் நிலை:

நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகள் மிதமானதாக இருக்கும். புத்தளம் முதல் காங்கேசன்துறை வரை மன்னார் வழியாக பரவியிருக்கும் கடல் பகுதி சில நேரங்களில் 

மிகவும் கடினமானதாக அல்லது இருக்கலாம்.