ஜனவரியில் பாடசாலைகள் திறக்க வேண்டும்!!

ஆசிரியர் - Editor II

அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் பாடசாலைகளை மீண்டும் கண்டிப்பாக திறக்க வேண்டும் என இந்திய பாடசாலை தேர்வு சான்றிதழ் சபை உத்தரவிட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக அவ்வமைப்பின் இயக்குநர் ஆராதோன், அனைத்து மாநில முதல் மந்திரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, எங்கள் அமைப்பின் கீழ் செயற்படும் பாடசாலைகள் அனைத்திலும் 10 ஆவது, பிளஸ்-2 வகுப்புகள் ஜனவரி 4 ஆம் திகதிக்குள் திறக்க வேண்டும். தற்போது இணையத்தின் ஊடாக  பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

எனினும், மாணவர்கள் உரிய விளக்கங்களை பெறுவதற்கும், புராஜெக்ட், பிராக்டிகல் செய்வதற்கும் பாடசாலைகளை  திறந்தால்தான் முடியும். எனவே குறிப்பிட்ட காலத்திற்குள் பாடசாலைகளை திறக்க வேண்டும். அதேநேரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.