விரைவில் கொரோனா தடுப்பூசி!! -முன்களப்பணியாளர்கள், முதியவர்களுக்கு முன்னுரிமை என்கிறார் பிரதமர்-
கொரோனாவை தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் முன்கள பணியாளர்கள் மற்றும் முதியவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி முன்னுரிமை அடிப்படையில் போடப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.
கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கலந்துரையாடல் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.