ஒரு கோடி காப்புறுதி பணத்திற்காக கணவரை கொலை செய்த மனைவி!! -8 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்-
ஒரு கோடி ரூபா காப்புறுதி பணத்திற்காக கணவரை கொலை செய்த மனைவி 8 ஆண்டுகளுக்கு பின் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
மராட்டிய மாநிலம் லாத்தூரை சேர்ந்தவர் அன்னாராவ் என்பவர் ஜோதி என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்நிலையில் அன்னாராவ் 2012 ஆம் ஆண்டு லாத்தூரில் உள்ள பாபால்காவ் பகுதியில் வாகனம் மோதி உயிரிழந்தார்.
அன்னாராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காப்பீடு நிறுவனம் சார்பில் பொலிஸாரிடத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் அன்னாராவின் தம்பி பகவத், இன்சூரன்ஸ் பணத்திற்காக தனது அண்ணன் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தார். அண்ணன் மனைவி ஜோதி, காப்பீடு நிறுவன ஏஜென்டு ரமேஸ், அவரது நண்பர் கோவிந்த் ஆகியோர் மீது 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் திகதி ஆவ்சா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். இருப்பினும் ஜோதி மீது பொலிஸார் வழக்கு தாக்கல் செய்யவில்லை.
இந்தநிலையில் மாவட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரால் இது தொடர்பான வழக்கு கடந்த 3 மாதங்களாக மறுவிசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணையில் ஒரு கோடி ரூபா காப்புறுதி பணத்திற்காக அன்னாராவ் கொலை செய்யப்பட்டது அம்பலமானது.
இந்தநிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு காப்புறுதி பணத்திற்காக கணவரை கொலை செய்ததாக அவரது மனைவி ஜோதியை பொலிஸார் கைது செய்தனர்.