SuperTopAds

மீன் பிடிக்க சென்றிருந்த மீனவரை அடித்து சென்ற வெள்ளம்..! மீனவரை காணவில்லை..

ஆசிரியர் - Editor I

"புரவி" புயல் காரணமாக பெரும் வெள்ள பெருக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில் அபாய எச்சரிக்கையை மீறி நந்திக்கடலில் மீன் படிக்க சென்றிருந்த மீனவர் ஒருவர் காணமல்போயுள்ளார்.

நந்திக்கடல் நீர் பெருக்குடுத்திருக்கும் நிலையில் குறித்த மீனவர் வள்ளத்தில் மீன்பிடிக்க சென்றிருந்த நிலையில் வள்ளம் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் குறித்த மீனவர் காணாமல்போயுள்ளார்.

தற்போது தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.