சூழ்நிலையை பொறுத்து ரஜினியுடன் கூட்டணி!! -சரணடையும் பன்னீர்செல்வம்-
வருங்கால அரசியல் சூழ்நிலையை பொறுத்து சூப்பஸ்டார் ரஜினியுடன் கூட்டணி அமைப்பேன்ற என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றிய தனது அறிவிப்பினை இன்று வியாழக்கிழமை வெளியிட்டிருந்தார்.
இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஊடகவியலாளர்களிடம் ரஜினிகாந்தின் அறிவிப்பு குறித்து பேசினார். அப்போது அவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்கிறோம் என்று தெரிவித்தார்.
மேலும் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று கூறிய அவர், வரும் காலத்தில் சூழ்நிலையை பொறுத்து ரஜினியுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.